img
Kirivalam Foundations

Blog Details

Image
Image

வவுனியா வடக்கு முன்பள்ளிகளின் வலயமட்ட விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 84 முன்பள்ளிகளைச் சேர்ந்த மழலைகளின் வலயமட்ட விளையாட்டு விழா புளியங்குளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மழலைகளின் உடல், சமூக மற்றும் உளவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு விளையாட்டு மற்றும் செயற்பாட்டு போட்டிகள், வினோத உடைப் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு கிரிவலம் அறக்கட்டளை முக்கிய நிதி மற்றும் வள ஆதரவை வழங்கியது. நிகழ்விற்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக சுமார் ரூ.2 இலட்சம் பெறுமதியான உதவிகளை அறக்கட்டளை வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பிரதேச மற்றும் காவல்துறை அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு கழகங்கள், சமூக அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

மழலைகளின் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.

நிகழ்வின் முழுமையான காணொளியை YouTube இல் பார்வையிட: (308) வவுனியாவில் சிறுவர்களின் மாபெரும் விளையாட்டுப் போட்டி வாரிவழங்கிய கிரிவலம் அறக்கட்டளை – YouTube

Leave A Comment