- Start donating poor people
எங்களைப் பற்றி
கிரிவலம் அறக்கட்டளை – மனிதநேயத்திற்கான ஒரு பயணம்
கிரிவலம் அறக்கட்டளை இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சமூக நல அமைப்பாகும். சமூகத்தில் தேவையுள்ள மக்களுக்கு ஆதரவளித்தல், மனிதநேயத்தை வளர்த்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களித்தல் போன்ற நோக்கங்களுடன் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடனும் சமத்துவத்துடனும் வாழும் உரிமை உள்ளது என்ற நம்பிக்கையுடன், சமூகத்தின் பல்வேறு தேவைகளை அடையாளம் கண்டு எங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.
நன்கொடை வழங்குங்கள்
தேவையுள்ள மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
உதவத் தொடங்குங்கள்
தேவையுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.
0094772676241
கிரிவலம் அறக்கட்டளையின் பயணம்
கிரிவலம் அறக்கட்டளை இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சமூக நல அமைப்பாகும். சமூகத்தில் தேவையுள்ள மக்களுக்கு ஆதரவளித்தல், மனிதநேயத்தை வளர்த்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களித்தல் போன்ற நோக்கங்களுடன் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடனும் சமத்துவத்துடனும் வாழும் உரிமை உள்ளது என்ற நம்பிக்கையுடன், சமூகத்தின் பல்வேறு தேவைகளை அடையாளம் கண்டு எங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.
கிரிவலம் அறக்கட்டளை இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சமூக நல அமைப்பாகும். சமூகத்தில் தேவையுள்ள மக்களுக்கு ஆதரவளித்தல், மனிதநேயத்தை வளர்த்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களித்தல் போன்ற நோக்கங்களுடன் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடனும் சமத்துவத்துடனும் வாழும் உரிமை உள்ளது என்ற நம்பிக்கையுடன், சமூகத்தின் பல்வேறு தேவைகளை அடையாளம் கண்டு எங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.
கிரிவலம் அறக்கட்டளையின் பயணம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி, கிளிநொச்சியில் யாசகம் செய்து வந்த வயோதிபப் பெண்ணொருவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், அவருக்கு வீட்டு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய மனிதநேயச் செயற்பாட்டிலிருந்து ஆரம்பமானது. அன்பும் மனிதாபிமானமும் நிறைந்த அந்தச் செயல், பிறர் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயரிய எண்ணத்திற்கு விதையாக அமைந்தது.
ஜெர்மனியில் வசிக்கும் எமது ஸ்தாபகரின் உழைப்பு, தியாக உணர்வு மற்றும் இலங்கை மக்கள்மீதான அளவற்ற அன்பின் வெளிப்பாடாகவே கிரிவலம் அறக்கட்டளை உருவானது. தனது வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களும் கஷ்டங்களும் வேதனைகளும் பிறரின் வாழ்வில் மீண்டும் நிகழக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், வறிய மக்களின் வாழ்க்கையை இயன்றவரை முன்னேற்ற வேண்டும் என்ற இலக்குடன் அவர் இந்த அறக்கட்டளையை உருவாக்கினார்.
சமூக நலப் பணிகளின் விரிவாக்கம்
கிரிவலம் அறக்கட்டளை உருவானதிலிருந்து, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆரம்பகாலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட கல்வி கற்கும் சிறார்கள் ஆகியோருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்
- பெற்றோரை இழந்த சிறார்களுக்கான ஆதரவு
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்
- பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்புத் திட்டங்கள்
- முதியோருக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்
- மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான உதவிகள் மற்றும் ஊக்குவிப்பு நிதிகள்
- இயற்கை அனர்த்தங்களின்போது உடனடி நிவாரண நடவடிக்கைகள்
மலையகத்திற்கான மனிதநேயப் பயணம்
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மலையகத்தில் லயம் எனப்படும் தொடர்குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 வீடுகள் தீக்கிரையானபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதன் மூலம் கிரிவலம் அறக்கட்டளை மலையகத்திற்கான தனது சமூகநலப் பயணத்தை ஆரம்பித்தது.
“மலையக மக்களும் எமது உறவுகள்; நாம் அனைவரும் இலங்கையர்” என்ற சமூக ஒருமைப்பாட்டு எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம், பின்னர் கல்வி உதவிகள், சமூக நலத்திட்டங்கள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சாதனையாளர்களுக்கான நிதி அனுசரணைகள் என விரிவடைந்தது.
மேலும், சமூக நல அமைப்புகளாக உருவாகி வளர்ந்து வரும் அமைப்புகளுக்கு நிதி மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம், அவர்களின் சமூகப் பணிகளுக்கும் கிரிவலம் அறக்கட்டளை பக்கபலமாக இருந்து வருகிறது.
ஸ்தாபகரின் தன்னலமற்ற பங்களிப்பு
கிரிவலம் அறக்கட்டளையின் ஸ்தாபகர், தனது அடையாளங்களை முன்னிறுத்தாமல், தனது சொந்த நிதியிலிருந்து இலங்கை ரூபாய் மதிப்பில் 450 இலட்சம் ரூபாய் அளவிலான நிதியை
சமூகநலத் திட்டங்களுக்காக வழங்கியுள்ளதாக அறக்கட்டளை தெரிவிக்கிறது.
இந்த நிதி கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூக நலப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்புடன் செயல்படும் நிர்வாகக் குழு
அறக்கட்டளையின் ஆரம்பகால மூத்த உறுப்பினர்களாக கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தி திரு. கே.டி. பாரதி பொருளாளராகவும், திரு. அனுஷாந்தகுமார் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து பணியாற்றினர்.
பின்னர் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி ஜனனி அருசாத் செயலாளராகவும், திரு. அருள்தாஸ் அருசாத் வெளிமாகாண செயற்திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்தனர். அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்தன.
அதேவேளை, கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி தவகலா அனுஷாந்தகுமார் உப தலைவராகச் செயற்பட்டு, அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டமைப்பை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.
ஒரு பெயர் அல்ல… ஒரு உணர்வு
இன்று கிரிவலம் அறக்கட்டளை ஒரு தொண்டு நிறுவனமாக மட்டுமல்லாமல், மனிதாபிமானத்தின் ஒரு இயக்கமாக திகழ்கிறது.
ஒரு தனிநபரின் தன்னலமற்ற உழைப்பில் ஆரம்பமான இந்தப் பயணம், இன்று பலரின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் சமூகப் பணியாக வளர்ந்துள்ளது.
கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மனிதநேயம் ஆகியவை கிரிவலம் அறக்கட்டளையின் அடித்தளக் கற்களாக விளங்குகின்றன. ஸ்தாபகரின் உயரிய எண்ணங்களுக்கு உயிரூட்டி, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் நிர்வாக உறுப்பினர்களும் இந்தப் பெரும் பயணத்தின் ஆணிவேராகத் திகழ்கின்றனர்.

எங்கள் நோக்கு (Vision)
கல்வி, சமத்துவம், மனிதநேயம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் மூலம்
ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழக்கூடிய
வளமான, சமத்துவமான மற்றும் மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்குதல்.
எங்கள் பணி (Mission)
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துதல்,
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவளித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு
நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல், பெண்கள் தலைமையிலான
குடும்பங்களை வலுப்படுத்துதல் மற்றும் போரினாலும் வறுமையாலும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகள், மருத்துவம், கல்வி
மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் மூலம் நிலையான சமூக
முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
- Start donating poor people
எங்கள் அன்பான பயனாளர்களின் மனமார்ந்த கருத்துகள்
கிரிவலம் அறக்கட்டளையின் உதவி எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேவையான நேரத்தில் அவர்கள் வழங்கிய உணவு உதவி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது
— சிவகுமார்
கிளிநொச்சி
என் குழந்தையின் கல்விக்குத் தேவையான உதவியை வழங்கியதற்கு கிரிவலம் அறக்கட்டளைக்கு மனமார்ந்த நன்றி. அவர்களின் உதவி எங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.”
— ஒரு பெற்றோர்
பரந்தன்
உணவு உதவி கிடைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது. எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி
— சாந்தி
முல்லைத்தீவு