வெள்ள அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கண்டாவளை பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் அகில் அண்ணா அவர்களின் நிதியுதவியுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன. இதற்காக அவர் ரூ.2 இலட்சம் நிதியுதவியை வழங்கியிருந்தார்.
வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதியாகக் காணப்படும் இப்பகுதியில், 54 குடும்பங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல வீடுகளில் வெள்ளநீர் இன்னும் தேங்கி இருந்ததுடன், பாதைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் நிவாரணப் பொருட்களை அப்பகுதிக்கு எடுத்துச் செல்வதிலும் சிரமங்கள் காணப்பட்டன.
கிராம சேவையாளர் பிரிவின் பரிந்துரையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொதிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள், சுவிஸ் நாட்டில் இருந்து உதவியளித்த அகில் அண்ணா அவர்களுக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் இப்பகுதி மக்களுக்கு எதிர்காலத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிகழ்வின் முழுமையான காணொளியை YouTube இல் பார்வையிட: வீட்டுக்குள் தண்ணீரா கண்கலங்கும் மக்கள் உதவிய புலம்பெயர் உறவுகள்









