கிழக்கு மாகாணத்தின் வந்தாறுமூலை பகுதியில் அமைந்துள்ள கணேச வித்தியாலயத்தின் ஆசிரியர்–மாணவர் பாராட்டு விழாவிற்கு கிரிவலம் அறக்கட்டளை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குதல், பாடசாலை இலட்சணையை மீளுருவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கிரிவலம் அறக்கட்டளை நிதி மற்றும் அனுசரணை வழங்கியுள்ளது. மேலும், இந்நிகழ்வுக்காக ரூ.15,000 நிதிப் பங்களிப்பும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கணேச வித்தியாலயத்தில் தற்போது 540 மாணவர்களும் 25 கல்விசார் ஆளணியினரும் உள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், பாடசாலையின் பயன்பாட்டிற்காக மீளுருவாக்கம் செய்யப்பட்ட பாடசாலை இலட்சணையும் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கும் கிரிவலம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கிரிவலம் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பாடசாலை சமூகத்தின் சார்பில் அறக்கட்டளைக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் முழுமையான காணொளியை YouTube இல் பார்வையிட: (307) மட்டக்களப்பில் கிரிவலம் அறக்கட்டளையின் மற்றும்மெரு உதவித்திட்டம் – YouTube



















































