img
Kirivalam Foundations

Blog Details

Image
Image

புளியங்குளம் பாடசாலையில் ஆசிரியர்களுக்கான உதவி

புளியங்குளம் முன்பள்ளிப் பாடசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், கிரிவலம் அறக்கட்டளை சார்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

நீண்ட தூரம் பயணித்து முன்பள்ளிகளில் கற்பிக்கும் இரு ஆசிரியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், ஆறு ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் பணிகளை சிறப்பாக முன்னெடுக்க உதவும் வகையில் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள், முன்பள்ளிப் பணிக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை என தெரிவிக்கப்பட்டது.

கிரிவலம் அறக்கட்டளையின் இந்த உதவிக்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் அறக்கட்டளையின் நிறுவுனர் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேவைகளுக்கு உதவி வழங்கி வருவதாகவும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் ஒருவரின் ஓய்வுபெறும் நிகழ்வுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முழுமையான காணொளியைப் பார்வையிட: வவுனியிவில் விடைபெற்ற தாயும் அறக்கட்டளையின் உதவியும்

Leave A Comment